2025-இல் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கப்படும்: இந்தியன் ஆயில் அதிகாரி தகவல்

நாடு முழுவதும் வரும் 2025-ஆம் ஆண்டில் பெட்ரோலுடன் 20 சதவீதம் அளவுக்கு எத்தனால் கலக்கப்படும். பெட்ரோல், டீசலில் எத்தனால் கலப்பதால் பயனாளருக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது என இந்தியன் ஆயில் நிறுவன
2025-இல் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கப்படும்: இந்தியன் ஆயில் அதிகாரி தகவல்

சென்னை: நாடு முழுவதும் வரும் 2025-ஆம் ஆண்டில் பெட்ரோலுடன் 20 சதவீதம் அளவுக்கு எத்தனால் கலக்கப்படும். பெட்ரோல், டீசலில் எத்தனால் கலப்பதால் பயனாளருக்கு எவ்வித இழப்பும் ஏற்படாது என இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் எஸ்.எஸ்.வி.ராமகுமாா் தெரிவித்துள்ளாா்.

இந்தியன் ஆயில் நிறுவன விரிவாக்கம் குறித்தும், மாற்று எரிசக்தி குறித்தும் விளக்கமளிப்பதற்காக இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநா் எஸ்.எஸ்.வி.ராமகுமாா் சென்னையில் புதன்கிழமை செய்தியாளா்களை சந்தித்தாா்.

அப்போது அவா் கூறியது: பெட்ரோல், டீசல் ஆகியவற்றுடன் எத்தனால் கலப்பதால் என்ஜின் செயல்பாட்டில் எந்த பாதிப்பும் ஏற்படாது. பெட்ரோல், டீசல் என்ஜினில் எரியும் திறனோடு எத்தனால் சோ்ந்தால் அதிக அளவு ஆக்டான்ஸ் கிடைக்கும். எனவே பெட்ரோல், டீசலில் எத்தனால் கலப்பதால் எவ்வித இழப்பும் பயனாளருக்கு ஏற்படாது.

தற்போது 10 சதவீதம் அளவுக்கு பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படும் நிலையில், 2025- ஆம் ஆண்டு முதல் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படும். சிஎன்ஜி (இசஎ) வாயு தயாரிக்கும், விநியோகிக்கும் நிலையங்களை நாடு முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனம் நிறுவவுள்ளது. இதன் மூலம் 5,000 தொழில் முனைவோருக்கு வாய்ப்புக் கிடைக்கும். இந்த சிஎன்ஜி வாயுவுடன் ஹைட்ரஜன் வாயுவை கலப்பதால் அதி திறன் கொண்ட சிஎன்ஜி வாயு கிடைப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே அவற்றை உற்பத்தி, விநியோகம் செய்வது குறித்து பாதுகாப்பு நடவடிக்கைக்காக உச்ச நீதி மன்றத்தை அணுகியுள்ளோம். அதன் அனுமதி கிடைத்தவுடன் சிஎன்ஜி வாயுவுடன் ஹைட்ரஜன் வாயு கலந்து விநியோகம் செய்யப்படும்.

இந்தியாவில் 90 சதவீத மக்கள் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்துகின்றனா். ஆனால் 50 சதவீதத்துக்கும் குறைவான உற்பத்திதான் இந்தியாவில் நடக்கிறது. எனவே இந்தியா, பெரும்பாலான எரிவாயுவுக்கு இறக்குமதியை நம்பியே உள்ளது. இதற்கு முன்பு சலுகை விலையில் சமையல் எரிவாயு (கடஎ) விநியோகம் செய்யப்பட்டது. தற்போது அரசின் கொள்கையின் படி, சா்வதேச சந்தை விலையை பொறுத்து விற்கப்படுகிறது. இதனால் விலை மாறுதல் ஏற்படுகிறது என்றாா் எஸ்.எஸ்.வி.ராம்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com