சட்டைநாதர் கோயில் திருப்பணிகளுக்கான சாரம் அமைக்கும் பணி தீவிரம்

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் குடமுழுக்கு நடத்திட திருப்பணிகள் தொடங்கவுள்ள நிலையில், சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
சீர்காழி சட்டைநாதர் கோயில் கோபுரங்களில் திருப்பணிகள் தொடங்கிட சாரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.
சீர்காழி சட்டைநாதர் கோயில் கோபுரங்களில் திருப்பணிகள் தொடங்கிட சாரங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

சீர்காழி: சீர்காழி சட்டைநாதர் கோயிலில் குடமுழுக்கு நடத்திட திருப்பணிகள் தொடங்கவுள்ள நிலையில், சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்ட சட்டைநாதர் கோயில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். இங்குள்ள பிரம்ம தீர்த்தக்குளத்தில் 7- ஆம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று நிகழ்வு நடைபெற்றது. திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிய தலம் ஆகும். 

இக்கோவிலில் சிவபெருமான் லிங்கம், மூர்த்தம், சங்கமம் ஆகிய மூன்று நிலைகளில் காட்சி தருகிறார். மலைமீது சிவன்பார்வதி கயிலாயக் காட்சியாக உருவ வழிபாட்டில் தோணியப்பர் உமாமகேஸ்வரியாக அருள்பாலிக்கின்றனர்.

பிரச்சித்திபெற்ற இக்கோவிலில் கடந்த 1991-ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடந்தது. அதன் பின்னர் 30 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடைபெற தீர்மானிக்கப்பட்டு கடந்த மாதம் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஏற்பாட்டின்படி, மதுரை ஆதீனம் 293 ஆவது பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருப்பனந்தாள் காறுபாறுசபாபதி தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் திருப்பணிகள் தொடங்கிட அடிக்கல் நாட்டப்பட்டது. 

இதனிடையே திருப்பணிகளை தொடங்கிட கோயில் கோபுரங்களில் சவுக்குமரம் கொண்டு சாரம் அமைக்கும் பணி தீவிரமாக நடந்துவருகிறது. 

கோயிலின் கிழக்கு, வடக்கு, தெற்கு கோபுரங்களில் சாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சட்டைநாதர் மலை கோயிலிலும் சாரம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதன்பின்னர் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள் சுதை வேலைகள் பணிகள் தொடங்கவுள்ளது. 30 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பணிகள் தொடங்கி விறு,விறுப்பாக நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com