கடலூரில் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்க சிறப்பு முகாம்

கடலூரில் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்க அக்டோபர் 9ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
கடலூரில் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்க சிறப்பு முகாம்
கடலூரில் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்க சிறப்பு முகாம்

கடலூரில் திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்க அக்டோபர் 9ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், கடலூர் மாவட்டத்திலுள்ள திருநங்கைகளுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்கு ஏதுவாக 09.10.2021 சனிக்கிழமை அன்று அனைத்து வட்ட வழங்கல் அலுவலங்களில் சிறப்பு முகாம் (காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை) நடத்தப்படுகிறது.

இம்முகாமில் மின்னணு குடும்ப அட்டை பெறாத திருநங்கைகளுக்கு இணையம் மூலம் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க 1. ஆதார் அட்டை 2. வாக்காளர் அடையாள அட்டை 3. முகவரிக்கான ஆதாரமாக நலவாரிய உறுப்பினர் அட்டை, எரிவாயு ரசீது, வீட்டுவரி ரசீது, வீட்டு வாடகை ஒப்பந்த பத்திரம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று இவற்றுடன் புகைப்படம் மற்றும் கைப்பேசி எண் கட்டாயம் கொண்டு வருதல் வேண்டும். 

18 வயது பூர்த்தியடைந்தவர்கள் மட்டுமே மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

மேலும், அரசு நடைமுறைபடுத்தியுள்ள கரோனா  விதிகளுக்குட்பட்டு அரசு பணியாளர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் சிறப்பு முகாமில் சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 
இவ்வாய்ப்பினை திருநங்கைகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்களால் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com