கரோனா குறைந்தபிறகு அனைத்து நாள்களிலும் கோயில்கள் திறக்கப்படும்: அமைச்சர் சேகர்பாபு

கரோனா குறைந்தபிறகு அனைத்து நாள்களிலும் கோயில்கள் திறக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். 
சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு
சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு

கரோனா குறைந்தபிறகு அனைத்து நாள்களிலும் கோயில்கள் திறக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு நாள்களில் கோயில்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், தமிழகத்தில் அனைத்து நாள்களிலும் கோயில்களைத் திறக்கக்கோரி பாஜக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர், சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் 3 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளன. கோயில் நந்தவனத்தை மேம்படுத்தி பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இருக்கிறோம். 

சென்னை மாநகராட்சியின் சீர்மிகு திட்டத்தின் கீழ் கோயில் குளம் மேம்படுத்தப்பட உள்ளது. 

கோயில்களுக்கு சமஸ்கிருத பெயர்களுடன் தமிழ் பெயர்களும் சேர்ந்து இடம்பெற முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

அரசியலில் தங்களை முன்னிறுத்திக்கொள்ள எதிர்க்கட்சிகள் இதுபோன்ற போராட்டங்களை முன்னெடுக்க செய்வார்கள். திமுக அரசுக்கு எதிராக போராட அவர்களுக்கு காரணம் எதுவுமில்லை. மக்களுக்கு திமுக அரசின் மீது நல்ல நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. 

கரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு அனைத்து நாள்களிலும் கோயில்களைத் திறக்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார்' என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com