பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100-ஐ கடந்தது! 

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ஐந்தாவது நாளாக முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்து வருகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ஐந்தாவது நாளாக முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்து வருகிறது. 

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளை விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. இதில், பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. 

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமை பெட்ரோல் விலையை லிட்டருக்கு 26 காசுகளும், டீசல் விலையை லிட்டருக்கு 34 காசுகளும் அதிகரித்து நாடு முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு உச்சம் பெற்றது. இதனால் 
சென்னையில் மீண்டும் பெட்ரோல் விலை ரூ.101.01 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தில்லியில் ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.103.54, மும்பையில் ரூ.109.54, சென்னையில் ரூ. 101.01-க்கு வெள்ளிக்கிழமை விற்கப்பட்டது. இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு தில்லியில் ரூ.92.12, மும்பையில் ரூ.99.92, சென்னையில் ரூ.96.60-க்கு விற்கப்பட்டது.

உள்ளூா் வரிகளுக்கு ஏற்ப மாநிலத்துக்கு மாநிலம் விலையில் மாற்றம் உள்ளது. 

கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளான ஓபேக் கூட்டமைப்பு உற்பத்தியை அதிகரிக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்துள்ளதால் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் விலை அதிகரித்துள்ளதால், இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று செல்லப்படுகிறது. 

நாட்டில் கடந்த ஜூலை 18 முதல் செப்டம்பா் 23 வரை பெட்ரோல் டீசல் விலை உயா்த்தப்படவில்லை. அந்தக் காலகட்டத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.0.65 காசுகளும், டீசல் 1.25 காசுகளும் குறைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com