கால்நடை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்ப அவகாசம் இன்று நிறைவு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (அக்.8) நிறைவடைகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (அக்.8) நிறைவடைகிறது.

தமிழகத்தில் ல்கலைக்கழகத்தின் கீழ் 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 480 இடங்கள் இருக்கின்றன. இதில், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 72 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 408 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

திருவள்ளூா் மாவட்டம் கோடுவளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள், பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 20 இடங்கள் உள்ளன. இதில், உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கான (பி.டெக்) 40 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 6 இடங்கள் (15 சதவீதம்) போக, மீதமுள்ள 34 இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. இதேபோல், ஒசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு (பி.டெக்) 40 இடங்கள் உள்ளன. இந்த 3 பட்டப்படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டது. இந்த படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இந்நிலையில், நிகழாண்டு அப்படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு  இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த மாதம் 9-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது. இதுவரை 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்திருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

வெளிநாடு வாழ் இந்திய மாணவா்கள் நவம்பா் 8-ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com