வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் ஊராட்சியில் இடைத்தேர்தல்:  ஆர்வத்தோடு வாக்களிக்கும் கிராமத்தினர்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு சனிக்கிழமை (அக்.9) காலை முதல் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் கிராமத்தினர் வரிசையில் நின்று ஆர்வத்தோடு வாக்களித்து வருகின்றனர்.
கத்தரிப்புலம் கோயில் குத்தகை வாக்குப்பதிவு மையத்தில் வரிசையில் நின்று வாக்களிக்கும் வாக்காள்கள்.
கத்தரிப்புலம் கோயில் குத்தகை வாக்குப்பதிவு மையத்தில் வரிசையில் நின்று வாக்களிக்கும் வாக்காள்கள்.


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கத்தரிப்புலம் ஊராட்சி தலைவர் பதவிக்கு சனிக்கிழமை (அக்.9) காலை முதல் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் கிராமத்தினர் வரிசையில் நின்று ஆர்வத்தோடு வாக்களித்து வருகின்றனர்.

கத்தரிப்புலம் ஊராட்சியின் தலைவராக இருந்த அபிமன்னன் காலமானதையடுத்து தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

அதிமுக ஆதரவுடன் அபிமன்னன் மகன் வீரமணி, திமுக ஆதரவுடன் தருமலிங்கம் உள்பட 4 பேர் போட்டியிடுகின்றனர்.

5924 வாக்காளர்கள் உள்ள இந்த ஊராட்சியில் 5 மையங்களில் உள்ள 9 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

சமூக இடைவெளியுடன் கரோனா தடுப்புக்கான முன்னெச்சரிக்கை பணிகளுடன், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் மையத்தில்  தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com