அரசு வங்கியா? அதிகாரி வீட்டு பூஜை அறையா? சு. வெங்கடேசன் எம்பி கண்டனம்

நவராத்திரியின் ஒன்பது நாள்களும், ஆடை கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் வங்கி மைய அலுவலக பொது மேலாளர் விடுத்திருக்கும் அறிக்கைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம்
அரசு வங்கியா? அதிகாரி வீட்டு பூஜை அறையா? சு. வெங்கடேசன் எம்பி கண்டனம்
அரசு வங்கியா? அதிகாரி வீட்டு பூஜை அறையா? சு. வெங்கடேசன் எம்பி கண்டனம்


சென்னை: நவராத்திரியின் ஒன்பது நாள்களும், ஆடை கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்திய யூனியன் வங்கி மைய அலுவலக பொது மேலாளர் விடுத்திருக்கும் அறிக்கைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நவராத்திரிக்கு ஒன்பது நாளும் ஒன்பது நிற உடையில் வா. இல்லையென்றால் தண்டம் கட்டு. இது என்ன அரசு வங்கியா அல்லது அதிகாரி வீட்டின் பூஜை அறையா என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த உத்தரவை உடனயடியாகத் திரும்ப பெற வண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இந்திய யூனியன் வங்கி மைய அலுவலகத்தில் பொது மேலாளர் ஏ.ஆர். ராகேவேந்திரா என்பவர் இப்படி ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.

நவராத்திரியின் ஒன்பது நாள்களும் உடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டுமாம். யார் இவருக்கு அதிகாரம் தந்தது. இன்ன நிறத்தில் உடை உடுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது அதிகார மீறல். அடுத்தவரின் உரிமைகளில் தலையிடுகிற அத்துமீறல் என்று வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com