கூத்தாநல்லூர்: மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்க சட்டம் தயாராக உள்ளது- நீதிபதி பேச்சு

மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளைத் தீர்க்க, சட்டப்பணிகள் ஆணைக்குழு எப்போதும் தயாராக உள்ளது என சார்பு நீதிபதி எம்.வீரணன் தெரிவித்தார்.
மனோலயம் மனவளர்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் கலந்துரையாடி சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான எம்.வீரணன்.
மனோலயம் மனவளர்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் கலந்துரையாடி சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான எம்.வீரணன்.

கூத்தாநல்லூர்: மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளைத் தீர்க்க, சட்டப்பணிகள் ஆணைக்குழு எப்போதும் தயாராக உள்ளது என சார்பு நீதிபதி எம்.வீரணன் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், குடிதாங்கிச்சேரியில் அமைந்துள்ள மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சி பள்ளியில், சட்டப்பணிகள் ஆணைக்குழு குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. 

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், திருவாரூர் மாவட்ட முதன்மை நீதிபதியுமான எம்.சாந்தி ஆலோசனைப் படி, குடிதாங்கிச்சேரி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமிற்கு, மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோருக்களுக்கான பயிற்சிப் பள்ளியின் நிறுவனரும், மேட்டுப்பாளையம் லயன்ஸ் சங்கத் தலைவருமான ப.முருகையன் தலைமை வகித்தார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ப.புவனா முன்னிலை வகித்தார். 

மனோலயம் மனவளர்ச்சிக் குன்றிய மாற்றுத்திறனாளி மாணவர்களுடன், சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிமன்ற நீதிபதியுமான எம்.வீரணன் கலந்துரையாடினார். 

தொடர்ந்து, அவர் பேசியது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. சமுதாயத்தில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க வேண்டும், என்பதற்காக, பலரையும் சந்திக்க வேண்டும் என உயர் நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளனர். 

அதன்படி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட மக்கள் அனைவரையும் நேரில் சந்தித்து வருகிறோம். மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்க, தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு எப்போதும் தயாராக உள்ளது. எந்தப் பிரச்னையாக இருந்தாலும், சட்டப்பணிகள் ஆணைக் குழுவை நாடலாம். 

கூத்தாநல்லூர், குடிதாங்கிச்சேரி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் பங்கேற்ற மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சி பள்ளி மாணவர்கள்.

கரோனா நோய்த்தொற்று காலம் என்பதால், அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். சமுக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார். 

நிகழ்ச்சிகளை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நிர்வாகி அருள்மொழி வர்மன் தொகுத்து வழங்கினார். தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்து  மற்றும் தேசிய கீதப் பாடலைப் பாடிய மாற்றுத் திறனாளி மாணவரை, நீதிபதி பாராட்டினார். 

அதைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளி மாணவர்களால் தயாரிக்கப்பட்ட பினாயில், ஒயர் கூடை, ஊதுபத்தி, சாக்பீஸ் உள்ளிட்ட கைவண்ணப் பொருள்களை பார்வையிட்டார். 

முகாமில், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றச் செயலளார் சக்தி என். செல்வராஜ், பயிற்சியாளர்கள் பாபுராஜன், சுரேஷ், செளமியா, மேலாளர் வினோத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com