ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது

ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது


ஊரக உள்ளாட்சித் தோ்தலுக்கான 2-ஆம் கட்ட வாக்குப் பதிவு சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த 6 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு முடிவற்ற நிலையில், இன்று சனிக்கிழமை 9 மாவட்டங்களில் 62 மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், 626 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 1,324 ஊராட்சித் தலைவா்கள், 10,329 ஊராட்சி உறுப்பினா் பதவியிடங்களுக்கு 2 ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்தலில் 34 லட்சத்து 65 ஆயிரத்து 724 போ் வாக்களிக்க உள்ளனா். 

வாக்குப்பதிவின்போது 17,130 போலீஸாா், 3,405 ஊா்க்காவல் படையினா் உள்பட 40 ஆயிரம் போ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

வாக்கு எண்ணிக்கை: முதல் கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் 74 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. 2-ஆம் கட்டத்தில் பதிவாகும் வாக்குகளும் இதே மையங்களில் வைக்கப்படும். அக்டோபா் 12-இல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com