கும்மிடிப்பூண்டியில் 5ம் கட்ட கரோனா தடுப்பூசி முகாம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற தமிழக அரசின் 5 ஆம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாமை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
கும்மிடிப்பூண்டி பஜாரில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.
கும்மிடிப்பூண்டி பஜாரில் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற தமிழக அரசின் 5 ஆம் கட்ட சிறப்பு தடுப்பூசி முகாமை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் கரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில், தமிழக அரசின் 5 ஆம் கட்ட சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமில் 10 ஆயிரம் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி பஜாரில் இந்த சிறப்பு தடுப்பூசி முகாமை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

இந்த சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, சுகாதார பணி மாவட்ட துணை இயக்குநர் டாக்டர் ஜவஹர்லால், கோட்டாட்சியர் செல்வம், வட்டாட்சியர் மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் பேசுகையில், தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி அதிக அளவு போடப்பட்டுள்ளதாக தெரிவித்தவர், கும்மிடிப்பூண்டியில் 1 லட்சத்தை தாண்டி தடுப்பூசி போடப்பட்டுள்ளதை பாராட்டினார்.

இந்த கரோனா தடுப்பூசி முகாமில் திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணை செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சி.எச்.சேகர், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், மாவட்ட கவுன்சிலர்கள் சாரதா முத்துசாமி, ராமஜெயம், திமுக பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன், திமுக நிர்வாகிகள் அறிவழகன், பாஸ்கரன், திருமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அவ்வாறே புதுகும்மிடிப்பூண்டி யில் ஊராட்சி தலைவர் டாக்டர் அஷ்வினி சுகுமாறன், துணை தலைவர் எம்.எல்லப்பன், ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு ஏற்பாட்டிலும், கீழ்முதலம்பேட்டில் ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், ஊராட்சி செயலாளர் சாமுவேல் ஏற்பாட்டிலும், எஸ்.ஆர்.கண்டிகையில் ஊராட்சி தலைவர் சி.எம்.ஆர்.ரேணுகா முரளி, ஊராட்சி செயலாளர் கர்ணன் ஏற்பாட்டிலும், மாதர்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் சீனிவாசன் ஏற்பாட்டிலும், ஆரம்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் தனசேகர் ஏற்பாட்டிலும், பாதிரிவேட்டில் ஊராட்சி தலைவர் என்.டி.மூர்த்தி ஏற்பாட்டிலும், மாநெல்லூரில் ஊராட்சி தலைவர் லாரன்ஸ் ஏற்பாட்டிலும் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது.

கும்மிடிப்பூண்டியில் 61 ஊராட்சிகளில் சுமார் 100 மையங்களில் நடைபெற்ற சிறப்பு கரோனா தடுப்பூசி முகாமிற்கான ஏற்பாடுகளை கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் மேற்பார்வை செய்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com