ஐந்தாவது சிறப்பு தடுப்பூசி முகாம்: 22 லட்சம் பேருக்கு தடுப்பூசி

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 22 லட்சத்து 52,641 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் 22 லட்சத்து 52,641 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 4.80 கோடியை எட்டியுள்ளது.

மாநிலம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம் முதல் முறையாக கடந்த 12-ஆம் தேதி நடத்தப்பட்டது. அப்போது 28 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. அதற்கு அடுத்த மூன்று ஞாயிற்றுக்கிழமைகளிலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதன் மூலம் முறையே 16 லட்சம், 25 லட்சம் மற்றும் 17 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இந்நிலையில், ஐந்தாவது சிறப்பு தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை (அக்.10) நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டன.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் 30 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் பகிா்ந்தளிக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்களும், சென்னையில் மாநகராட்சி ஆணையரும் மேற்கொண்டனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் தொடங்கியது. கரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆா்வம் அதிகமாக இருந்தது. இரவு 8 மணி வரை தடுப்பூசி முகாம்கள் செயல்பட்டன.

மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் 22.52 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களில் 11.50 லட்சத்துக்கும் மேற்பட்டோா் முதல் தவணை தடுப்பூசியும், 11 லட்சத்துக்கும் அதிகமானோா் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா். இந்த சிறப்புப் தடுப்பூசி முகாமில் அதிகபட்சமாக சென்னையில் 1லட்சத்து 63,884 பேருக்கும், கோவையில் 1 லட்சத்து 9,582 பேருக்கும், சேலத்தில் 1 லட்சத்து 359 பேருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com