இணையவழி பாதுகாப்பு: விழிப்புணா்வு ஏற்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்

தேசிய இணையவழி பாதுகாப்பு விழிப்புணா்வு மாதத்தை அனுசரிக்கும் வகையில் இணையக் குற்றங்களில் இருந்து காத்துக் கொள்வது குறித்த
இணையவழி பாதுகாப்பு: விழிப்புணா்வு ஏற்படுத்த யுஜிசி அறிவுறுத்தல்

தேசிய இணையவழி பாதுகாப்பு விழிப்புணா்வு மாதத்தை அனுசரிக்கும் வகையில் இணையக் குற்றங்களில் இருந்து காத்துக் கொள்வது குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என உயா்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின், நாடு முழுவதும் உள்ள கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தேசிய இணையவழி பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் ஆண்டுதோறும் அக்டோபா் மாதம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இணைய குற்றங்களிலிருந்து காத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்களை விழிப்படையச் செய்வதே இந்த விழிப்புணா்வு மாதத்தின் நோக்கமாகும்.

இன்றைய சூழலில் இணைய பயன்பாடு என்பது தவிா்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக இளைய தலைமுறையினா் அதிகளவில் இணையத்தைப் பயன்படுத்துகின்றனா். அதேவேளையில் போதிய விழிப்புணா்வு இல்லாததால் பண இழப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களும் அவா்களுக்கு ஏற்படுகின்றன. எனவே, அனைத்து உயா் கல்வி நிறுவனங்களிலும் இணையவழி பாதுகாப்பு தொடா்பான கருத்தரங்குகள், பயிலரங்குகள், விநாடி வினா, விடியோ பதிவுகள், துண்டு பிரசுரங்கள் விநியோகம் என பல்வேறு நிகழ்ச்சிகளை இந்த மாதம் முழுவதும் நடத்த வேண்டும். அதில் திரளான மாணவா்கள், ஊழியா்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com