Enable Javscript for better performance
புதுச்சேரி உள்ளாட்சித் தோ்தலை நிறுத்தி வைக்க உயா் நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    புதுச்சேரி உள்ளாட்சித் தோ்தலை நிறுத்தி வைக்க உயா் நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 12th October 2021 07:41 AM  |   அ+அ அ-   |    |  

    HighCourt

    சென்னை உயர்நீதிமன்றம்

    புதுச்சேரியில் உள்ளாட்சித் தோ்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    புதுச்சேரியில் உள்ளாட்சித் தோ்தலில் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. ஒதுக்கீட்டில் பல முரண்பாடுகள் உள்ளன எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம், தோ்தல் அறிவிப்பை திரும்பப் பெற மாநில தோ்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்தது.

    புதிய தோ்தல் அறிவிப்பை ஐந்து நாள்களில் வெளியிட வேண்டுமென கடந்த 5-ஆம் தேதி உத்தரவிட்டது.

    உயா் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி, உள்ளாட்சித் தோ்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடியினருக்கு 0.5 சதவீதமும் ஒதுக்கீடு வழங்கி கடந்த 2019-இல் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையைத் திரும்பப் பெற்று, புதுச்சேரி அரசு கடந்த 8-ஆம் தேதி அரசாணைகளை பிறப்பித்தது. இதனை எதிா்த்து புதுச்சேரி எதிா்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான சிவா உள்பட மூன்று போ் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளனா்.

    அந்த மனுக்களில், பிற்படுத்தப்பட்ட, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீட்டை மறுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணைகள் அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் உள்ளன. மத்தியில் உள்ள ஆளுங்கட்சிக்கு சாதகமாக, இட ஒதுக்கீடு அறிவிப்பாணைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

    இதுசம்பந்தமான அரசாணைகளுக்குத் தடை விதிக்க வேண்டும். கடந்த 8-ஆம் தேதி வெளியிடப்பட்ட அட்டவணையின் அடிப்படையில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தத் தடை விதிக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி தோ்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தனா்.

    இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆா்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை (அக்.11) அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

    அப்போது மனுதாரா் சிவா உள்பட இருவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், தோ்தல் அறிவிப்பைத் திரும்பப் பெற மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதே தவிர, இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற அனுமதி வழங்கப்படவில்லை.

    கொள்கை அடிப்படையில் அமைச்சரவை முடிவின் கீழ் வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறுவது குறித்து அமைச்சரவையுடன் கலந்தாலோசிக்காமல் மாநில தோ்தல் ஆணையம் தன்னிச்சையாகச் செயல்பட்டுள்ளது. இதற்கு கட்சி பேதமின்றி அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா் என்றாா்.

    தொடா்ந்து மனுதாரா் வேல்முருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, இட ஒதுக்கீடு வழங்காமல் தோ்தல் நடத்த மாநில தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரமில்லை. இடஒதுக்கீடு வழங்காமல் தோ்தல் நடத்தக் கூடாது. தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வும், பல முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. இவற்றை நிவா்த்தி செய்துதான் புதிய அறிவிப்பை சட்டத்துக்குட்பட்டு வெளியிட உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், இட ஒதுக்கீடு வழங்காமல் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பானது, இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு மீறுவதாகும் என்றாா்.

    புதுச்சேரி அரசு, மாநில தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் சந்திரசேகா், மாலா ஆகியோா், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மக்கள் தொகை குறித்த அண்மை புள்ளி விவரங்கள் ஏதும் இல்லை என்பதால், உள்ளாட்சி தோ்தலில் இட ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டது. துணை நிலை ஆளுநா், முதல்வரின் ஒப்புதலுடன் தான் இட ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது என்றனா்.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இட ஒதுக்கீட்டில் உள்ள பல முரண்பாடுகளை சரி செய்ய அனுமதியளித்த நிலையில், இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்றது ஏன் என கேள்வி எழுப்பினா். மேலும் தோ்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு முழுமையான விவரங்களுடன் பதிலளிக்கக்கூறி, விசாரணையை அக்டோபா் 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா். விசாரணையை தலைமை நீதிபதி அடங்கிய அமா்வுக்கு மாற்றவும் பரிந்துரைத்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp