உத்தமபாளையம், கோவையில் என்.ஐ.ஏ. போலீசார் சோதனை

உத்தமபாளையம், கோவை அருகே தேசிய புலனாய்வு முகமை போலீசார்  செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
உத்தமபாளையம் அருகே சோதனையிடும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்
உத்தமபாளையம் அருகே சோதனையிடும் என்.ஐ.ஏ. அதிகாரிகள்


உத்தமபாளையம் : தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே பண்ணைபுரத்தில் தேசிய புலனாய்வு முகமை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தின் தேனி, ராமநாதபுரம், மதுரை, கோவை, சென்னை உள்ளிட்ட ஐந்து இடங்களில் என்.ஐ.ஏ. போலீசார் சோதனை நடைபெற்றது.

அதன்படி, தேனி மாவட்டம் பண்ணைப்புரம் பாவலர் தெருவில் தங்கம் மகன் கார்த்திக்(38) என்பவர் வீட்டில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த தேசிய புலனாய்வு முகமையின் காவல் கண்காணிப்பாளர் தர்மராஜ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட தனிப்படையினர் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் சோதனை செய்தனர். கார்த்திக் கடந்த 10 ஆண்டுக்கு முன்பே வீட்டை விட்டு சென்றது தெரிவந்தது. தற்பாேது அவரது அம்மா    மட்டுமே இருந்த  நிலையில் வீட்டில் சுமார் 5 மணி நேரம் மேற் கொண்ட விசாரணையில் சில ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து என் .ஐ .ஏ போலீசார் கூறுகையில் , தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தில் தொடர்பு இருப்பதாக எழுந்த தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

கோவை

தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திடீர் சோதனை நடந்து வருகிறது.
தமிழகம் உட்பட கேரளா ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களில் மாவோயிஸ்ட்களுடன் தொடர்புடைய 23 நபர்கள் இல்லங்கள், இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களாக அறியப்படும் புலியகுளம் பகுதியில் வசித்து வந்த மருத்துவர் தினேஷ் என்பவரது வீட்டிலும், சுங்கம் பகுதியிலுள்ள டேனிஷ் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல பொள்ளாச்சி அடுத்த அங்கலங்குறிச்சி பகுதியிலுள்ள சந்தோஷ் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனையானது நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே தினேஷ் மற்றும் டேனிஷ் ஆகியோர் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை சந்தோஷ் இதுவரை கைது செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com