நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை: செந்நிறமாக மாறிய காவிரி

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் வரும் நீர் செந்நிறமாக மாறி வருகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.


பென்னாகரம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் வரும் நீர் செந்நிறமாக மாறி வருகிறது.

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, ஒகேனக்கலுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கத்தினால் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, காவிரி கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக ஒகேனக்கலுக்கு நீர்வரத்து நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேலும் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தானது செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி 21 ஆயிரம் கன அடியாக தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருந்தது. 

தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி நாட்றாம்பாளையம், பிலிகுண்டு, ராசி மணல், கேரட்டி, கெம்பாக்கரை மற்றும் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளான வனப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கிளை ஆளான தொட்டெல்லா மற்றும் சிறு ஓடைகளில் இருந்து வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் புதன்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. 

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐவார் பாணி, ஐந்தருவி மற்றும் சிற்றருவிகளில் நீர்வரத்து அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.  

மேலும் நடைபாதை பகுதியின் மேல் பரப்பில் தண்ணீர் செல்வதால் சிறிய அருவிகள் தோன்றி காணப்படுகின்றன. காவிரி ஆற்றில் வரும் நிறுவனத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றி வரும் நீர் செந்நிறமாக மாறி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com