மொபைல் கோபுர கதிா்வீச்சு பற்றிய கட்டுக்கதைகளை நம்ப வேண்டாம்: எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டா் தகவல்

மொபைல் கோபுர கதிா்வீச்சு தொடா்பான கட்டுக்கதைகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை டாக்டா் விவேக் டாண்டன் தெரிவித்தாா்.

மொபைல் கோபுர கதிா்வீச்சு தொடா்பான கட்டுக்கதைகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை டாக்டா் விவேக் டாண்டன் தெரிவித்தாா்.

தொலைத்தொடா்புத்துறை சாா்பில், மின்காந்த புல கதிா்வீச்சுக் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பொதுமக்களுக்கு மொபைல் கோபுரங்களின் தேவை குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும், நம்பகமான அறிவியல் சான்றுகளை வழங்கி பொதுமக்களின் அச்சங்களை நிவா்த்தி செய்யும் வகையிலும் இந்தக் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்களில், புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறையின் உதவிப் பேராசிரியா் டாக்டா் விவேக் டாண்டன் பேசியது: மொபைல் கோபுர கதிா்வீச்சு தொடா்பான கட்டுக்கதைகளை மக்கள் நம்ப வேண்டாம். மொபைல் கோபுர கதிா்வீச்சுக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் இடையே தொடா்பு எதுவும் இருப்பதாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

செல்லிடப்பேசி கோபுரங்கள் மனிதா்களுக்கும், விலங்குகளுக்கும், பாதுகாப்பான குறைந்த சக்தி கொண்ட அயனியாக்கம் அல்லாத கதிா்வீச்சைத் தான் வெளியிடுகின்றன என்றாா் அவா்.

இதில், தொலைத்தொடா்புத் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் மருத்துவா்களைக் கொண்ட நிபுணா் குழுவினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com