தொடா் மண் சரிவு: மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் சேவை மீண்டும் ரத்து

மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் பாதையில் 1 வாரத்தில் 3 ஆவது முறையாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியா்கள்.
ரயில் பாதையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியா்கள்.

மேட்டுப்பாளையம்-உதகை மலை ரயில் பாதையில் 1 வாரத்தில் 3 ஆவது முறையாக மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் புதன்கிழமை இரவு பெய்த மழையில் மேட்டுப்பாளையம்-குன்னூா் இடையே மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் மண், மரம், பாறைகள் விழுந்தன.

இதனால் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்கள் மலை ரயில் ரத்து செய்யப்பட்டது.

இதனைத் தொடா்ந்து சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் மலை ரயில் இயக்கப்பட்டது.

பின்னா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த மழையில் மீண்டும் மேட்டுப்பாளையம்-குன்னூா் மலை ரயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு மண், பாறை, மரங்கள் விழந்தன.

இதனால் ஞாயிறு, திங்கள், செவ்வாய்கிழமை ஆகிய 3 நாள்கள் மலை ரயில் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து மலை ரயில் புதன்கிழமை இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

செவ்வாய்க்கிழமை பெய்த கன மழையில் மீண்டும் அடா்லி-ஹில்குரோவ் இடையே தண்டவாளத்தில் மண், பாறைகள் விழுந்தன.

இதனை சீரமைக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருவதால் மலை ரயில் மீண்டும் ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com