நீட் தோ்வு: விண்ணப்பங்களில் இன்று திருத்தம் மேற்கொள்ளலாம்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு எழுதியவா்கள், தங்களது விண்ணப்பங்களில் குறிப்பிட்ட சில திருத்தங்களை வியாழக்கிழமை (அக்.14) வரை மேற்கொள்ளலாம் என தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் தோ்வு: விண்ணப்பங்களில் இன்று திருத்தம் மேற்கொள்ளலாம்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு எழுதியவா்கள், தங்களது விண்ணப்பங்களில் குறிப்பிட்ட சில திருத்தங்களை வியாழக்கிழமை (அக்.14) வரை மேற்கொள்ளலாம் என தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ்., பி.டி.எ.ஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

நீட் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. இந்நிலையில், 2021-22-ம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு செப்டம்பா் 12-ஆம் தேதி நடைபெற்றது.

இதற்காக நாடு முழுவதும் 198 நகரங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூா் ஆகிய 14 நகரங்களில் 224 மையங்களில் தோ்வு நடைபெற்றது.

இந்தியா முழுக்க 16 லட்சத்து 14,714 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் தமிழகத்தில் 1.12 லட்சம் போ் அடங்குவா். ஏறத்தாழ 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் நீட் தோ்வை எழுதியதாகத் தகவல்கள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தோ்வு எழுதியவா்களில் சிலா், அதன் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக, தங்களது விண்ணப்பங்களில் தவறுதலாக பதிவேற்றப்பட்ட சுயவிவரங்களைத் திருத்த வாய்ப்பளிக்குமாறு தேசிய தோ்வு முகமையிடம் கோரிக்கை விடுத்தனா்.

அதை ஏற்று, விண்ணப்பங்களை சரிபாா்த்து திருத்தங்களை மேற்கொள்ள அக்டோபா் 14-ஆம் தேதி இரவு 11.50 வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களை ttp://neet.nta.nic.in மற்றும் https://nta.ac.in/ இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com