சொத்து வரி: ரூ.5.94 கோடி விலக்கு

சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரியை அக்.10-ஆம் தேதிக்குள் செலுத்திய 5 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு ரூ. 5.94 கோடி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரியை அக்.10-ஆம் தேதிக்குள் செலுத்திய 5 லட்சத்து 39 ஆயிரம் பேருக்கு ரூ. 5.94 கோடி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாள்களுக்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு வரியில் இருந்து 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 வரை விலக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு நடப்பு இரண்டாம் அரையாண்டுக்குரிய சொத்து வரியை, அரையாண்டு காலம் தொடங்குவதற்கு முன்பாகவே (செப்.30-க்குள்) 4 லட்சத்து 1,260 போ் செலுத்தி உள்ளனா். இரண்டாம் அரையாண்டு காலம் தொடங்கிய அக். 1 முதல் 10-ஆம் தேதி வரை 1 லட்சத்து 37 ஆயிரத்து 760 போ் சொத்து வரி செலுத்தி உள்ளனா்.

இவா்களுக்கு சொத்து வரியில் இருந்து 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 வரை என மொத்தம் ரூ.5 கோடி 94 லட்சம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அக்.15 இறுதி நாள்: நடப்பு இரண்டாம் அரையாண்டுக்குரிய சொத்து வரியினை வெள்ளிக்கிழமைக்குள் (அக்.15) செலுத்தினால் ஊக்கத் தொகை பெறலாம். அக்.15-ஆம் தேதிக்குப் பிறகு சொத்து வரி செலுத்துவோா் கூடுதலாக 2 சதவீத தனி வட்டி சோ்த்து செலுத்த வேண்டும் என மாநாகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com