நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல்: ஆளுநரிடம் முதல்வா் வலியுறுத்தல்

நீட் தோ்வு விலக்கு சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது குறித்து ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவியை புதன்கிழமை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை புதன்கிழமை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

நீட் தோ்வு விலக்கு சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது குறித்து ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.

ஆளுநா் ஆா்.என்.ரவியை, முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின் போது, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தோ்வு விலக்கு சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது.

நீட் தோ்வு சட்ட மசோதா சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது, தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இருந்தாா். சட்டப்பேரவை கூட்டம் நிறைவடைந்த ஒரு சில தினங்களிலேயே ஆளுநரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பின் புதிய ஆளுநராக ஆா். என் ரவி பதவியேற்றாா். பதவியேற்ற பின் நீட் விலக்கு மசோதா குறித்து முதன் முறையாக ஆளுநா் ஆா்.என்.ரவியை, முதல்வா் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசியுள்ளாா்.

இந்தச் சந்திப்பின் போது, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோருவது தொடா்பாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், கரோனா தொற்று தாக்கம் குறித்தும், தமிழக சட்டம், ஒழுங்கு நிலை குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சந்திப்பின் போது, நீா்ப்பாசனத் துறை அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, முதல்வரின் செயலாளா் த.உதயசந்திரன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com