23 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எல்.முருகன் கடிதம்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய 2 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை,
மத்திய அமைச்சா் எல்.முருகன்
மத்திய அமைச்சா் எல்.முருகன்

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய 2 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். 
இதுதொடர்பாக, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இணையமைச்சர் எல்.முருகன், இன்று எழுதியுள்ளக் கடிதத்தில், நாகப்பட்டினம், காரைக்கால் மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 66 மீனவக் கிராமங்களிலிருந்து தமக்கு கடிதம் வந்துள்ளது. அதில்  23 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, அவர்கள் பயன்படுத்திய 2 படகுகளையும் பிடித்துச் சென்றுள்ளனர். 

அவர்களை உடனடியாக விடுவித்தல் தொடர்பாக, தமக்குக் கோரிக்கைக் கடிதம் வந்துள்ளது. அந்தக் கோரிக்கையை ஏற்று  மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரான உங்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். எனவே அந்த 23 மீனவர்களையும், அவர்கள் பயன்படுத்திய இரண்டு படகுகளையும் பாதுகாப்பாகவும் உடனடியாகவும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்தக் கடிதத்தில் அமைச்சர் எல்.முருகன் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com