கொளத்தூரில் 560 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கொளத்தூரில் 560 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்
கொளத்தூரில் 560 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்


சென்னை: கொளத்தூர் தொகுதியில் 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பெரியார் நகர், மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக அவசரகால ஊர்தி,  ஜி.கே.எம். காலனியிலுள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள், மேஜைகள் மற்றும் நாற்காலிகள்  உள்பட ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.

மு.க.ஸ்டாலின் இன்று (16.10.2021) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எவர்வின் பள்ளியில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 16 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள், 5 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவி, 2 பயனாளிகளுக்கு வங்கிக் கடன் மானியம், 5 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், 197 பயனாளிகளுக்கு முதியோர், கணவனால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள், சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்த 312 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, 5 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, கரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த 18 குழந்தைகளுக்கு நிவாரண நிதி, என மொத்தம் 560 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உலக உணவு நாள் சிறப்புக் கட்டுரை: பிரியாணியும் பழைய சோறும்

அதனைத் தொடர்ந்து, கொளத்தூர், பெரியார் நகர், மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் வழங்கப்பட்ட ஒரு அவசரகால ஊர்தியையும், கொரோனா தடுப்பூசி பணிக்காக 2 வாகனங்களின் சேவைகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து, 210 நபர்கள் அமரக்கூடிய மூன்று இருக்கைகள் கொண்ட 70 நாற்காலிகளையும் மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

பின்னர், கொளத்தூர், ஜி.கே.எம்.காலனியிலுள்ள சென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் 70 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, 34 ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்தார். மேலும், அப்பள்ளிக்கு கட்டடம் கட்டுவதற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கே.வி. ராமமூர்த்தி முதல்வரிடம் வழங்கினார். 
அத்துடன் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சார்பில் 1500 மாணவர்கள் அமரும் வகையில் 25 இலட்சம் ரூபாய் மதிப்பில் அளிக்கப்பட்ட மேஜைகள் மற்றும் நாற்காலிகளையும் பள்ளியின் பயன்பாட்டிற்காக முதல்வர் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com