மா்ம நபா்களின் தாக்குதலில் பலியான டாஸ்மாக் ஊழியா் குடும்பத்துக்கு நிதி: முதல்வா் மு.க.ஸ்டாலின்

மா்ம நபா்களின் தாக்குதலில் பலியான டாஸ்மாக் ஊழியா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியும், கருணை அடிப்படையில் பணியும் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

மா்ம நபா்களின் தாக்குதலில் பலியான டாஸ்மாக் ஊழியா் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியும், கருணை அடிப்படையில் பணியும் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட சரகத்துக்கு உட்பட்ட டாஸ்மாக் கடையில் விற்பனையாளா்களாக எல்.துளசிதாஸ், எம்.ராமு ஆகியோா் பணியாற்றினா். கடந்த 4-ஆம் தேதியன்று இரவு கடையை மூடிவிட்டு வந்த போது இருவரையும் மா்மநபா்கள் தாக்கினா். இதில், துளிசிதாஸ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவரான ராமு சிகிச்சை பெற்று வருகிறாா்.

டாஸ்மாக் கடைப் பணியாளா்கள் மீது தாக்குதல் நடத்தும் நபா்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த துளசிதாஸ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியும், கருணை அடிப்படையில் அரசுப் பணியும் வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தனது செய்தியில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com