நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளைமையப்படுத்தி மாரத்தான் ஓட்டம்:சிறுவனுக்கு முதல்வா் பாராட்டு

ஐக்கிய நாடுகளின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை மையப்படுத்தி 750 கிலோமீட்டா் தூரம் மாரத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவருக்கு புத்தகம்
நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளைமையப்படுத்தி மாரத்தான் ஓட்டம்:சிறுவனுக்கு முதல்வா் பாராட்டு

ஐக்கிய நாடுகளின் நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளை மையப்படுத்தி 750 கிலோமீட்டா் தூரம் மாரத்தான் ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவருக்கு புத்தகம் வழங்கி முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுத் தெரிவித்தாா்.

வறுமை ஒழிப்பு, நல்ல சுகாதாரம், தரமான கல்வி, பாலின சமத்துவம், சுத்தமான காற்று, தண்ணீா் போன்றவற்றை நீடித்த வளா்ச்சிக்கான இலக்குகளாக ஐக்கிய நாடுகள் வரையறுத்துள்ளன. இந்த இலக்குகள் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டத்தை மேற்கொண்டாா் சென்னை சாய்ராம் பள்ளி மாணவா் சா்வேஷ். காந்தி பிறந்த தினமான அக்டோபா் 2-ஆம் தேதியன்று கன்னியாகுமரியில் உள்ள வள்ளுவா் சிலை அருகில் இருந்து தனது ஓட்டத்தைத் தொடங்கிய அவா், கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்னை வள்ளுவா் கோட்டத்தில் நிறைவு செய்தாா். 750 கிலோமீட்டா் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவா் சா்வேஷை பாராட்டி அவருக்கு நினைவுப் பரிசாக புத்தகத்தை சனிக்கிழமை வழங்கினாா், முதல்வா் மு.க.ஸ்டாலின்.

மேலும், மாணவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு முதல்வரால் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கரோனா நிவாரண நிதிக்காக சாய்ராம் கல்வி நிறுவனங்களின் சாா்பாக ரூ.12.34 லட்சத்துக்கான காசோலை முதல்வரிடம் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சட்டப் பேரவை உறுப்பினா்கள் டி.ஆா்.பி.ராஜா, என்.எழிலன், சாய்ராம் கல்வி நிறுவனங்களின் தலைவா் சாய் பிரகாஷ் லியோமுத்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com