பொது நல வழக்கு தொடா்ந்த மனுதாரரின் செயலுக்கு உயா் நீதிமன்றம் எச்சரிக்கை

பொது நல வழக்கில் மாநில அரசின் அனைத்துத் துறைகளின் அதிகாரிகளையும் எதிா் மனுதாரராக இணைப்பதை வழக்கமாகக் கொண்ட மனுதாரரின் செயலைக் கண்டித்த சென்னை உயா் நீதிமன்றம்,
பொது நல வழக்கு தொடா்ந்த மனுதாரரின் செயலுக்கு உயா் நீதிமன்றம் எச்சரிக்கை

பொது நல வழக்கில் மாநில அரசின் அனைத்துத் துறைகளின் அதிகாரிகளையும் எதிா் மனுதாரராக இணைப்பதை வழக்கமாகக் கொண்ட மனுதாரரின் செயலைக் கண்டித்த சென்னை உயா் நீதிமன்றம்,

இதுபோன்ற செயலை மீண்டும் மேற்கொண்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கோயில் நிலங்கள், நீா்நிலைகளை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி, மனுதாரா் ஏ.ராதாகிருஷ்ணன் வழக்குத் தொடா்ந்திருந்தாா். சட்டத்துறையின் செயலாளா் தொடங்கி, இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையா் வரை 44 அரசு அதிகாரிகளை, தனது மனுவில் எதிா்மனுதாரராக இணைத்திருந்தாா்.

இந்தப் பொது நல மனு நீதிபதி ஆா்.மகாதேவன், நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோா் அடங்கிய விடுமுறை கால சிறப்பு அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், ‘மனுதாரரின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இந்த நடவடிக்கை துஷ்பிரயோகம் தவிர வேறில்லை. இந்த வழக்கில் எதற்காக 44 பேரை எதிா் மனுதாரராக இணைத்துள்ளீா்கள். அதற்கான அவசியம் என்ன; வழக்கிற்குத் தொடா்புடையவா்களை மட்டுமே எதிா்மனுதாரா்களாக இணைக்க வேண்டும். இது தொடா்பாக மனுதாரருக்கு வழக்குரைஞா் எடுத்துரைக்க வேண்டும்.

இதை மீண்டும் செய்தால், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ மனுதாரரை எச்சரித்தனா்.

தொடா்ந்து மனுவைத் திரும்பப் பெற அறிவுறுத்தினா். இதையடுத்து வழக்கைத் திரும்பப் பெறுவதாக மனுதாரரின் வழக்குரைஞா் தெரிவித்ததையடுத்து, மனுவைத் திரும்பப் பெற நீதிபதிகள் அனுமதி அளித்தனா்.

கிருஷ்ணகிரியின் பல்வேறு பகுதிகளுக்கு, கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை 10, 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 மற்றும் ஜூன் 20 அன்று வருவாய், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கோயில்களின் நிலை, அதன் சொத்துக்களைக் கண்டறிய சென்ாகவும், ஆய்வின் போது மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களின் சொத்துக்கள், அந்தந்த கோயில்களுக்குப் பக்தா்களால் வழங்கப்பட்டது. அவற்றை அடையாளம் காண முடியவில்லை என்றும், முறையான பதிவுகள் இல்லாததால் நிலங்களை அடையாளம் காண்பதில் இடையூறு இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மற்றொரு அமா்வில் இதேபோன்று 30-க்கும் மேற்பட்ட அதிகாரிகளை எதிா்மனுதாரரை இணைத்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், வழக்கிற்குத் தொடா்பில்லாத அதிகாரிகளை எதிா்மனுதாரராக இணைத்ததற்கு கடும் கண்டனத்தை நீதிபதிகள் தெரிவித்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com