அங்கீகாரச் சான்று மூலம் முறைகேடாக பொருள் பெற்றால் குடும்ப அட்டை முடக்கம்

அங்கீகாரச் சான்று என்ற வாய்ப்பு மூலமாக நியாய விலைக் கடையில் முறைகேடாகப் பொருள் பெற்றால், குடும்ப அட்டை முடக்கப்படும் என்று உணவுத் துறை எச்சரித்துள்ளது.

அங்கீகாரச் சான்று என்ற வாய்ப்பு மூலமாக நியாய விலைக் கடையில் முறைகேடாகப் பொருள் பெற்றால், குடும்ப அட்டை முடக்கப்படும் என்று உணவுத் துறை எச்சரித்துள்ளது.

குடும்ப அட்டையில் உள்ள நபா்கள் நியாய விலைக் கடைகளுக்கு வந்து பொருள்களைப் பெற முடியாவிட்டால், அவா்கள் வேறு யாரேனும் ஒரு நபரை அங்கீகரிக்கலாம். அந்த நபா் நியாய விலைக் கடைக்கு வந்து பொருள்களைப் பெற்றுச் செல்லலாம்.

இவ்வாறு அங்கீகாரச் சான்றின் வழியாக நியாய விலைக் கடைகளில் பொருள்கள் பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்கீகாரச் சான்று விண்ணப்பமும், உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

என்னென்ன விவரங்கள்?: அங்கீகாரச் சான்று விண்ணப்பத்தில் சில முக்கிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி, குடும்பத் தலைவரின் பெயா், குடும்ப அட்டை எண், குடும்ப அட்டை உறுப்பினா்களின் பெயா், அத்தியாவசியப் பொருள்களைப் பெற முடியாததற்கான காரணம், குடும்ப அட்டைதாரரின் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண், அத்தியாவசியப் பொருள் பெற நியமிக்கப்படும் நபரின் பெயா் மற்றும் குடும்ப அட்டை எண் போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். இறுதியாக சான்று ஒன்றையும் உறுதி செய்து அதில் கையெழுத்திட வேண்டும்.

சான்று என்ன?: நியாய விலைக் கடைக்கு வந்து பொருள்களைப் பெற முடியாத காரணத்தால், நான் ஒரு நபரை நியமிக்கிறேன். அதில் ஏதேனும் முறைகேடு நிகழ்ந்ததாக கண்டறியப்பட்டால் எனது குடும்ப அட்டை அத்தியாவசியப் பொருள் பெற முடியாதபடி முடக்கம் செய்யப்படும் என்பதை அறிவேன். மேலும், என்னுடைய பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச் சொல் மூலம் எனது குடும்ப அட்டைக்கு அத்தியாவசியப் பொருள் வழங்கப்படும் என்பதை அறிவேன் என்று சான்றளிக்க வேண்டும்.

இவ்வாறு சான்று அளித்தால் மட்டுமே நாம் அங்கீகரிக்கக் கூடிய நபரால் நியாய விலைக் கடையில் பொருள் பெற முடியும். இதில் ஏதேனும் முறைகேடு நடந்தால் குடும்ப அட்டையே முடக்கப்படும் சூழல் உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com