
மேட்டூர் அணை
மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 92.44 அடியிலிருந்து 93.50 அடியாக உயர்ந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை தனிந்த தன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 16,012 கன அடியிலிருந்து 15,409 கன அடியாக சற்று குறைந்து உள்ளது.
இதையும் படிக்க | மேற்குத் தொடா்ச்சி மலை சூழல் மோசமடைகிறது
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 56.74டி எம் சி யாக இருந்தது.
இதையும் படிக்க | முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி: புகாா்களுக்கு 104-ஐ அழைக்கலாம்
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.