தமிழக உள்ளாட்சித் தேர்தல்: வெற்றி பெற்ற பாஜக வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்து

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமா் நரேந்திர மோடி
பிரதமா் நரேந்திர மோடி

தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,

“தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்.”

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. 

இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய மொத்தம் 22 ஆயிரத்து 581 பதவியிடங்களில் போட்டியின்றி மற்றும் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன. அவர்கள் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பதிவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com