புதுச்சேரியில் பேரிடர் காலத்தில் பணியாற்றும் தன்னார்வலர் குழுவுக்கு பயிற்சி 

புதுச்சேரியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு சார்பில், பேரிடர் காலத்தில் பணியாற்றும் தன்னார்வலர் குழுவுக்கு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. 
பேரிடர் காலத்தில் பணியாற்றும் தன்னார்வலர் குழுவினருக்கான பயிற்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ரிஷிதா குப்தா. உடன் ஐஏஎஸ் அதிகாரி கிரிசங்கர், உதவி ஆட்சியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள்.
பேரிடர் காலத்தில் பணியாற்றும் தன்னார்வலர் குழுவினருக்கான பயிற்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் ரிஷிதா குப்தா. உடன் ஐஏஎஸ் அதிகாரி கிரிசங்கர், உதவி ஆட்சியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள்.



புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு சார்பில், பேரிடர் காலத்தில் பணியாற்றும் தன்னார்வலர் குழுவுக்கு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவி செய்யும் தன்னார்வலர்கள் குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த பயிற்சி முகாமானது, புதுச்சேரி கோரிமேடு காவல்துறை பயிற்சி மையத்தில் புதன்கிழமை காலை தொடங்கியது. 8 நாள்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் 61 பேர் கொண்ட தன்னார்வலர் குழு மற்றும் காவல், பொதுப்பணி, தீயணைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறையினர் கலந்து கொண்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழு சார்பில் அளிக்கப்படும் பயிற்சியில் கலந்துகொண்டுள்ள பேரிடர் காலத்தில் பணியாற்றும் தன்னார்வலர் குழுவினர்.

இவர்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு, காவல்துறை, தீயணைப்பு துறை, பேரிடர் மேலாண்மை துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. 

மாவட்ட ஆட்சியர் ரிஷிதா குப்தா பயிற்சியை தொடங்கி வைத்தார். ஐஏஎஸ் அதிகாரி கிரிசங்கர், உதவி ஆட்சியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து 8 நாள்கள் பயிற்சி வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com