ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரிடியம் மோசடி: 4 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 4 பேரை கிருஷ்ணன்கோவில் போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இரிடியம் மோசடியில் ஈடுபட்ட 4 பேரை கிருஷ்ணன்கோவில் போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ளது கிருஷ்ணன்கோவில். அங்கு காவல் சார்பு ஆய்வாளராக இருப்பவர் மணிகண்டன் இவர் வழக்கமாக காலை மற்றும் மாலை வேலைகளில் குற்றச் செயல்களை தடுக்கவும் சமூகவிரோத செயல்களை கண்காணிக்கவும் காவலர்களுடன் ரோந்து செல்வது வழக்கம்.

அப்போது வலையபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள டீ கடை முன்பு நான்கு பேர் அட்டை பெட்டியுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து காவல் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் விசாரித்தபோது வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பட்டுப்பூச்சி பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் (39), குன்னுரை சேர்ந்த கண்ணன்( 44) மற்றும் கோபிநாத் (29), சிவகாசியை சேர்ந்த கணேசமூர்த்தி (42) ஆகியோர் மற்றும் பழைய செம்பு மற்றும் பூஜா பித்தளை பொருள்களை வைத்து இருடியம் எனக்கூறி விற்பனை செய்வதாகவும் இவற்றை வாங்க தென்காசி தாலுகா கடையநல்லூரை சேர்ந்த அய்யாசாமி(72) மற்றும் சிலர் காத்திருப்பதாகவும் கூறினர்.

இதைத் தொடர்ந்து நான்கு பேரையும் கைது செய்த கிருஷ்ணன்கோவில் போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் பரமக்குடி சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com