மின்சார வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது: அண்ணாமலை பேட்டி

மின்சார வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். 
திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பாஜக மாவட்ட அலுவலகத்தை ஆய்வு செய்த தேசிய செயலாளர் அருண் சிங், மாநில தலைவர் அண்ணாமலை, சி.பி. ராதாகிருஷ்ணன், பொன்னார், சுதாகர் ரெட்டி.
திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பாஜக மாவட்ட அலுவலகத்தை ஆய்வு செய்த தேசிய செயலாளர் அருண் சிங், மாநில தலைவர் அண்ணாமலை, சி.பி. ராதாகிருஷ்ணன், பொன்னார், சுதாகர் ரெட்டி.


திருப்பூர்: மின்சார வாரியத்தின் மீதான புகாருக்கு மன்னிப்பு கேட்க முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். 

திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் கட்டப்பட்டு வரும் பாஜக மாவட்ட அலுவலகத்தை தேசிய செயலாளர் அருண் சிங், மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய செயற்குழு உறுப்பினர்கள் சி.பி. ராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன், தமிழக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். 

இதன் பிறகு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழகம் முழுவதும் பாஜக கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் கட்சிக்கு சொந்தமாக அலுவலங்கள் கட்டப்பட்டு வருகிறது. 

திருப்பூர் மாவட்டத்தில் கட்டப்பட்ட அலுவலகத்தை வருகின்ற நவம்பர் 10 ஆம் தேதி தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திறந்து வைக்க உள்ளார். மேலும் திருப்பூரில் இருந்தவாறு ஈரோடு ,திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டப்பட்ட கட்சி அலுவலகங்களையும் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைக்கிறார்.

இதையும் படிக்க | டீசல் விலை ரூ.100-ஐ நெருங்கியது

மேலும் மின்சார வாரியம் தொடர்பான புகாருக்கு மன்னிப்பு கேட்கக் கோரிய அமைச்சர் செந்தில்பாலாஜியின் விவகாரத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது. அதேவேளையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சந்தித்துக் கொள்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com