500 மின்சாரப் பேருந்துகள் வாங்கப்பட உள்ளன: அமைச்சர் ராஜகண்ணப்பன்

போக்குவரத்துக்கழகங்களுக்கு 500 மின்சாரப் பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாக அத்துறையின் அமைச்சர் ஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 
500 மின்சாரப் பேருந்துகள் வாங்கப்பட உள்ளன: அமைச்சர் ராஜகண்ணப்பன்

போக்குவரத்துக்கழகங்களுக்கு 500 மின்சாரப் பேருந்துகள் வாங்கப்பட உள்ளதாக அத்துறையின் அமைச்சர் ஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 
மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், இன்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் மற்றும் இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார். இந்த மத்திய பணிமனையானது, கடந்த 1972ஆம் ஆண்டு, 7.40 ஏக்கர் நிலப்பரப்பில் தொடங்கப்பட்டு, 2004ஆம் ஆண்டு முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் பயன்பாட்டில் உள்ளது. இப்பணிமனையிலிருந்து 34 பேருந்து வழித்தடங்களில் மொத்தம் 142 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பணிமனையில், 340 ஓட்டுநர்கள், 363 நடத்துநர்கள், 93 தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் 30 இதரப் பணியாளர்கள் என மொத்தம் 826 பணியாளர்கள் பணிபுரந்து வருகின்றனர். 
இதன் தலைமை இடமாக இயங்கி வரும் மா.போ.க. தலைமையகமானது, 2.20 ஏக்கர் நிலப்பரப்பில். 1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்தலைமையகத்தில் 757 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் மூலமாக, மத்திய பணிமனை, அடையாறு, திருவான்மியூர், தி.நகர், சைதாப்பேட்டை, மந்தைவெளி, தாம்பரம், கலைஞர் நகர், வடபழனி, பூவிருந்தவல்லி, அண்ணா நகர், வில்லிவாக்கம், வியாசார்பாடி, வள்ளலார் நகர், டோல்கேட், திருவொற்றியூர் உள்ளிட்ட 16 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் நவீனப்படத்தப்பட உள்ளன. இதில் ஒன்றான மத்திய பணிமனையில் இன்று (23.10.2021) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இப்பணிமனைகளில் வணிக வளாகங்கள் மற்றும் வாகன நிறுத்தங்கள் உள்ளிட்டவை அமைய உள்ளன. இதற்கான சாத்தியக்கூரு அறிக்கை பெறப்பட்டுள்ளது. கடந்த கலங்களில் பேருந்துகளின் டயர்கள் இயக்கமானது 42 ஆயிரம் கிலோ மீட்டராக இருந்தது. தற்போது 55 ஆயிரம் கிலோ மீட்டராக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பேருந்தின் அடிச்சட்டம் 42 அங்குலமாக இருந்தது, தற்போது 52 அங்குலமாக உயர்த்தப்பட்டுள்ளது. இஞ்சின், சேஸ் சிறப்பாக உள்ள 1500 பழையப் பேருந்துகளுக்கு கூண்டு கட்டுவது தொடர்பாக, முதல்வரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவானது, பணியாளர்களின் ஊதியம், பிறப் பணப்பலன்கள் மற்றும் பல்வேறு சலுகைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எட்டப்படும். போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,213 புதிய பேருந்துகள் மற்றும் 500 மின்சாரப் பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. சாதாரணக் கட்டணப் பேருந்துகளில் தினசரி 38 இலட்சம் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்கின்றனர். இது மகளிரிடம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளதோடு, முதல்வரின்
மீதான மாண்பினை பலமடங்கு உயர்த்தி உள்ளது. இன்று வரையில் 34 கோடி மகளிர் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர்.
தீபாவளி திருநாளை முன்னிட்டு, போக்குவரத்துத்துறை, காவல்துறை, மாநகராட்சி மற்றும் தொடர்புடைய துறைகளுடன் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் எந்தவித கூட்ட நெரிசலுமின்றி பாதுகாப்பாக தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய ஏதுவாக, பேருந்துகள் இயக்கிடவும், பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 6,000 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணி நியமனம் செய்ய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்துத் துறை பணியாளர்களுக்கான தீபாவளி போனஸ் வழங்குவது குறித்து அரசு கூடிய விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று தெரிவித்தார்.
இதன் பின்னர், பிராட்வே பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிகழ்வின் போது, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com