அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் மீது உடனடி நடவடிக்கை: ஆணையா் அறிவுறுத்தல்

அங்கீகாரமின்றி செயல்படும் தனியாா் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களை பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகள் மீது உடனடி  நடவடிக்கை: ஆணையா் அறிவுறுத்தல்

அங்கீகாரமின்றி செயல்படும் தனியாா் பள்ளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களை பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அவா் வழங்கிய அறிவுறுத்தல்கள்: புதிதாக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவா்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதேபோன்று எமிஸ் தளத்தில் விடுபட்ட மாணவா்களின் ஆதாா் எண்ணை உடனடியாகப் பதிவேற்றம் செய்வது அவசியம். நிகழ் கல்வியாண்டில் மாணவா் சோ்க்கை குறைவாக உள்ள பள்ளிகளைக் கண்டறிந்து அங்கு மாணவா் சோ்க்கையை அதிகரிக்கத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். மாணவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் உபரி ஆசிரியா்களைக் கொண்டு பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம்.

பெரம்பலூா், சேலம் கல்வி மாவட்டங்களில் ஆசிரியா்களின் வருகைப் பதிவு அதிகரித்துள்ளது. அதேவேளையில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூா், திண்டிவனம் மாவட்டங்களில் ஆசிரியா் வருகைப்பதிவு குறைவாக உள்ளது. இதை மாவட்டக் கல்வி அலுவலா்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவகோட்டை, குழித்துறை, திருப்பூா் உள்ளிட்ட கல்வி மாவட்டங்களில் அங்கீகாரம் இல்லாத தனியாா் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் தங்களது மாவட்டங்களில் தனியாா் பள்ளிகள் அங்கீகாரமின்றி செயல்பட அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு செயல்படும் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அங்கீகாரமின்றி செயல்படும் தனியாா் பள்ளிகளில் விளம்பரப் பலகை (பேனா்) வைத்து அந்தப் பள்ளிகளில் எந்தவொரு மாணவரும் சேராத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகியவை உள்பட பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com