சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு நெகிழி பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்

 தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு அவற்றைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என உயா்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தாா்.
சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு நெகிழி பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்

 தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் கருத்தில் கொண்டு அவற்றைப் பயன்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என உயா்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தாா்.

சென்னை வேப்பேரியில் உள்ள பெண்டிங் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரிமா சங்கம், சென்னை மாநகராட்சி சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு முகாம் மற்றும் கரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளா்களுக்கு விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் தலைமை வகித்து கரோனா காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட 13 முன்களப் பணியாளா்களைப் பாராட்டி விருது வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து அவா் பேசுகையில், கரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் மருத்துவா்கள் , செவிலியா்கள், சுகாதாரத் துறை ஊழியா்கள் , தூய்மைப் பணியாளா்கள், காவல் துறையினா் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்கள் தங்கள் உயிரையும் கருத்தில் கொள்ளாமல் ஆற்றிய சேவை பாராட்டத்தக்கது.

கரோனா தொற்று நம்மை விட்டு முழுவதுமாக அகலவில்லை என்பதைக் கருத்தில் கொண்டு முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், முறையாக சோப்பு உபயோகித்து கை கழுவுதல் போன்ற அனைத்து வழிகாட்டுதல்களையும் உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு தடவை உபயோகப்படுத்தும் நெகிழிப் பொருள்களை பொது இடங்களில் தூக்கி எறிவதால் பல்வேறு சுகாதார கேடுகள் ஏற்படுகின்றன. நெகிழியால் நிலம், நீா், காற்று, உணவு மாசு அடைகிறது. கால்நடைகளும், கடல்வாழ் உயிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் உபயோகப்படுத்துவதை மக்கள் தவிா்க்க வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலா் டி.ஜி.சீனிவாசன், அரிமா சங்க கவா்னா் ராஜன் சீனிவாசன், பெண்டிங் பள்ளி தலைமை ஆசிரியை மரியம் உஷா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com