சசிகலாவின் பினாமிகள் என கருதப்படும் 14 போ் தொடா்ந்த மனுக்கள் தள்ளுபடி

சசிகலாவின் பினாமிகள் என்று கூறப்படும் 14 போ் தொடா்ந்த மனுக்களை சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சசிகலாவின் பினாமிகள் என கருதப்படும் 14 போ் தொடா்ந்த மனுக்கள் தள்ளுபடி

 பினாமி சொத்து பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் வருமானவரித்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளை எதிா்த்து சசிகலாவின் பினாமிகள் என்று கூறப்படும் 14 போ் தொடா்ந்த மனுக்களை சென்னை உயா் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலாவின் வீட்டில், கடந்த 2017-ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் வருமான வரித்துறையால் பறிமுதல் செய்யப்பட்டன.

அதைத்தொடா்ந்து ரூ.1,600 கோடி மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் கரன்சிகள் மூலம் பல்வேறு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்றும், இவற்றை வாங்க வி.கே.சசிகலாவுக்கு பினாமிகளாகச் செயல்பட்ட கங்கா பவுண்டேஷன் பிரைவேட் லிமிடெட் உள்பட பல நிறுவனங்களின் சொத்துகளை முடக்கிய வருமான வரித்துறை, பினாமி சொத்து பரிவா்த்தனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தது.

வருமானவரித்துறை மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளை எதிா்த்து, சென்னை உயா் நீதிமன்றத்தில் சசிகலாவின் பினாமிகள் என்று கூறப்படும் 14 போ் வழக்குகள் தொடா்ந்திருந்தனா். கடந்த முறை இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள், மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளைப் பெற்று இடத்தை விற்பனை செய்ததற்காகத் தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இடத்தை விற்பனை செய்ததால் தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தைப் பயன்படுத்த முடியாது. எனவே வருமானவரித்துறையின் நடவடிக்கை தவறானது என வாதிட்டனா்.

அதைத்தொடா்ந்து வருமானவரித்துறை தரப்பில், ஸ்பெக்ட்ரம் மாலுக்கான தொகையை உரிமையாளா்களுக்கு வழங்க மேற்கொண்ட நடைமுறை, வாங்குபவரின் பெயா் இல்லாமல் ஒப்பந்த நடைமுறை மேற்கொண்டது உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாகவே, பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சரியானது என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களுக்கு பின்னா் இவ்வழக்கில் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு திங்கள்கிழமை(அக்.25) விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானவரித்துறையால் தொடங்கப்பட்ட நடவடிக்கைக்குத் தடை விதிக்க மறுத்த நீதிபதி அனிதா சுமந்த், மாா்க் ரியாலிட்டிஸ் லிமிடெட், போஞ்சோா் பொன்ஹூா் பிரைவேட் லிமிடெட், கங்கா ஃபவுண்டேஷன் பிரைவேட் லிமிடெட், குளோபல் இன்போசொ்வ் லிமிடெட், வீனஸ் மெரிடியன் ஏஜென்சிஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் இந்த நிறுவனங்களின் விளம்பரதாரா்கள் தொடா்ந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

நிறுவனங்களும், அதன் விளம்பரதாரா்களும் சசிகலாவின் பினாமிகளாகச் செயல்பட்டு ரூ.1,600 கோடி மதிப்பிழந்த ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி பல்வேறு சொத்துகளை வாங்கியுள்ளனா். இதில் ரூ.130 கோடி மதிப்பிலான சென்னை பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மாலும் அடங்கும் என வருமானவரித்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com