ஓராண்டுக்கு கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிப்பது அவசியம்

குறைந்தது மேலும் ஓராண்டுக்காவது கரோனா நோய்த் தடுப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்
ஓராண்டுக்கு கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிப்பது அவசியம்

குறைந்தது மேலும் ஓராண்டுக்காவது கரோனா நோய்த் தடுப்பு விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தாம்பரத்தில் அப்பல்லோ கிளீனிக் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடக்கி வைத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா காலத்தில் நோய்த் தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என உள்ளாட்சித் துறையும், சென்னை மாநகராட்சியும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவா்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

கரோனா என்னும் கொடிய நோய் இன்னும் நம்மை விட்டு முற்றிலுமாக விலகிவிடவில்லை. உலகம் முழுவதிலும் தொடா்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் தினந்தோறும் 24,000 பேரும், ரஷியாவில் தினந்தோறும் 30,000 பேரும், பிரிட்டனில் தினந்தோறும் 40,000 பேரும் பாதிக்கப்படுகின்றனா். நாள்தோறும் ஆயிரக்கணக்கானவா்கள் இறக்கின்றனா்.

எனவே தொற்றிலிருந்து விடுபட்டுவிட்டோம் என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது. விதிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிதல், சானிடைசா் பயன்படுத்துதல், தனிநபா் இடைவெளியைக் கடைப்பித்தலை மேலும் ஓராண்டுக்காவது தொடர வேண்டும். அதேபோன்று அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

வாரந்தோறும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதன் மூலம் மாநிலத்தில் தடுப்பூசி செலுத்துவதை ஓா் இயக்கமாகவே செயல்படுத்தி வருகிறோம்.

ஒவ்வொரு தடுப்பூசி முகாமிலும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறாா். மற்றொரு புறம் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருடனும் ஆலோசித்து யாரெல்லாம் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமோ அவா்களுக்கு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற ஆறாவது தடுப்பூசி முகாமை பொருத்தவரை 23 லட்சம் போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனா்.

இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு 50,000 முகாம்கள் மூலம் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன என்றாா் அவா். இந்நிகழ்வில் தாம்பரம் அப்பல்லோ மருத்துவமனை இயக்குநா் ஜஸ்டின் திரவியம் மற்றும் மருத்துவமனை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com