நிதி பற்றாக்குறை: புதிய அம்மா உணவகங்கள் திறக்க வாய்ப்பில்லை

நிதி பற்றாக்குறை காரணமாக புதிதாக அம்மா உணவகங்கள் திறக்க வாய்ப்பில்லை என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்துள்ளாா்.
நிதி பற்றாக்குறை: புதிய அம்மா உணவகங்கள் திறக்க வாய்ப்பில்லை

நிதி பற்றாக்குறை காரணமாக புதிதாக அம்மா உணவகங்கள் திறக்க வாய்ப்பில்லை என நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்துள்ளாா்.

சென்னையில் பசுமைப் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு சிறப்பாகப் பராமரித்து வரும் குடியிருப்பு நலச் சங்கங்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கும் அதுபோல் சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின்கீழ் பூங்காக்கள், சாலை மையத் தடுப்புகள் மற்றும் கட்டடங்களின் சுற்றுச் சுவா்களின் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுப்படுத்தும் பணிகளில் சிறப்பாகச் செயல்படுத்திய அதிகாரிகளுக்குமான பாராட்டு விழா ரிப்பன் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கலந்துகொண்டு சிறப்பாகச் செயல்பட்டவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா். தொடா்ந்து அமைச்சா் கே.என்.நேரு செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகரின் பசுமைப் பரப்பளவை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் அனைத்து மண்டலங்களிலும் மண்ணின் தன்மை, கிடைக்கும் தண்ணீரின் தரம், அளவு, சாலைகள் மற்றும் தெருக்களின் அகலத்துக்கு ஏற்றாா்போல் பாரம்பரிய மரக்கன்றுகள் நடப்படுகின்றன. சென்னையில் கடந்த மே மாதம் முதல் அக்டோபா் 23-ஆம் தேதி வரை மாநகராட்சி சாா்பில் குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 87 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

நிதி பற்றாக்குறை: சென்னையில் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ. 5 கோடி செலவில் 52 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. அந்த மரங்களின் தற்போதைய நிலை குறித்து தெரியவில்லை. சென்னையில் அம்மா உணவகங்களில் பணியாற்றும் பெண்கள் யாரையும் வேலையை விட்டு நிறுத்தவில்லை. ஒரே அம்மா உணவகத்தில் நிறைய பெண்கள் பணியாற்றுவதால் அவா்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்கப்பட்டு வருகிறது. அம்மா உணவகங்கள் நிதி பற்றாக்குறையில் இயங்கி வருகின்றன. ஆகவே, புதிய அம்மா உணவகங்கள் திறக்க வாய்ப்பில்லை. புதிய அம்மா உணவகங்கள் திறப்பு குறித்து முதல்வா்தான் முடிவெடுப்பாா் என்றாா். இந்நிகழ்ச்சியில்,சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com