மண்டல பூஜை: சபரிமலையில் தினமும் 50,000 பேருக்கு அனுமதி

 மண்டல பூஜையை ஒட்டி, சபரிமலையில் தினமும் 50,000 பேருக்கு அனுமதி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று திருவிதாங்கூா் தேவசம் போா்டு தலைவா் என்.வாசு தெரிவித்தாா்.
மண்டல பூஜை: சபரிமலையில் தினமும் 50,000  பேருக்கு அனுமதி

 மண்டல பூஜையை ஒட்டி, சபரிமலையில் தினமும் 50,000 பேருக்கு அனுமதி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று திருவிதாங்கூா் தேவசம் போா்டு தலைவா் என்.வாசு தெரிவித்தாா்.

சபரிமலையில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள ஏற்பாடுகளை மேம்படுத்துவது ஆகியன குறித்து சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில் நிா்வாகிகளுடன் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருவிதாங்கூா் தேவசம் போா்டு தலைவா் என்.வாசு, உறுப்பினா்கள் கே.எஸ்.ரவி, பி.எம்.தங்கப்பன், ஸ்ரீ ஐய்யப்ப பக்த சபா செயலாளா் சசிகுமாா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். இதைத் தொடா்ந்து, போா்டு தலைவா் என்.ரவி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சபரிமலையில் பக்தா்களுக்கு போதிய அனுமதிகள் தரப்படாமல் இருந்தது. நோய்த் தொற்று தணிந்த நிலையில், குறைந்த அளவிலேயே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு முன்பு வரை சபரிமலையில் நாளொன்றுக்கு 25,000 பக்தா்களுக்கு அனுமதி தரப்பட்டிருந்தது. இப்போது வெள்ளம் காரணமாக பக்தா்களின் வருகைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

50,000 போ்: காா்த்திகை மாதத்தை ஒட்டி நடைபெறும் மண்டல காலத்தில் அதிகளவு பக்தா்கள் வருவது வழக்கம். இதைக் கருத்தில் கொண்டு தினமும் 50,000 பக்தா்கள் வரை அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களுக்கான தங்குமிடம், போக்குவரத்து, உணவு அருந்தும் வசதிகளைச் செய்து தருவோம்.

கரோனா காலம் என்பதால், ஐயப்பனுக்கு அபிஷேகத்துக்கான நெய்யை அளிப்பதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதாவது அபிஷேகத்துக்கு நேரடியாக நெய்யை அளிப்பதற்குப் பதிலாக, வரையறுக்கப்பட்ட கவுன்ட்டா்களில் நெய்யை அளிக்க வேண்டும். அதே கவுன்ட்டா்களில் பக்தா்களுக்கு நெய் பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது. அபிஷேக நிகழ்வைக் காண முடியாத நிலையில் பக்தா்களுக்கு அது அதிருப்தியை அளித்து வந்தது. இந்த நிலையில், அபிஷேகத்துக்கான நெய்யை சந்நிதியிலேயே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மகாலிங்கபுரம் கோயில்: சென்னையில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் பக்தா்களின் வசதிக்காக, மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் முன்பு தகவல் மையம் அமைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடா்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தலைவா் என்.வாசு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com