நிறைவேற்றப்படும் வாக்குறுதிகளுக்கு மாதாந்திர ரிப்போர்ட்: மநீம வலியுறுத்தல்

தமிழகத்தில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் மாதாந்திர ரிப்போர்ட் கார்டு வழங்குவதை உறுதி செய்யுங்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களுக்கு திமுக 505 வாக்குறுதிகளை அளித்திருந்தது. அவற்றில் இன்றுவரை நிறைவேற்றப்படாத மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றை இப்போது கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

திமுகவின் தேர்தல் அறிக்கையில் 491வது வாக்குறுதி, திட்டங்கள் செயலாக்கம் என்கிற புதிய அமைச்சகம் ஏற்படுத்தப்படும் எனச் சொல்லப்பட்டிருந்தது. மேலும், அதில் ஒவ்வொரு மாதத்தின் முதல் பணி நாளன்றும், தேர்தல் அறிக்கை வாக்குறுதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவான ஆய்வை முதல்வர் மேற்கொள்வார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களைச் சந்தித்து, அரசின் சாதனை அறிக்கையை (ரிப்போர்ட் கார்டு) ஊடகங்களுக்கு வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

திமுக பதவியேற்று இன்றுடன் 173 நாள்கள் ஆகியுள்ளன. இதுவரை 200 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து வருகிறார். ஆனால் மாதந்தோறும் ரிப்போர்ட் கார்டு வழங்கப்படும் என்ற முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதி இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

எனவே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ரிப்போர்ட் கார்டினை ஊடங்களுக்கு வழங்கும் வாக்குறுதியை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரை கேட்டுக் கொள்கிறேன் என்று கமல் தெரிவித்துள்ளார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com