திருச்செந்தூர் சூரசம்ஹாரத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற நவம்பர் 9-ல் நடைபெறவிருக்கும் சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயில்
திருச்செந்தூர் முருகன் கோயில்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்தசஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகளுக்குப் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா நவம்பர் 4ம் தேதி துவங்கி 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  இந்த விழா கந்த சஷ்டி திருவிழா நடத்துவது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கோவில் இணை ஆணையர் குமார்துரை, மற்றும் விடுதி உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள்  மற்றும்  அறநிலை துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும்போது,

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சிகளுக்கு பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவித்தார். மேலும் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் மற்றும் முன்பதிவு அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் சூரசம்ஹாரம்,  திருக்கல்யாணம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் யூடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் பேசும்போது,

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் தொடர்ந்து சஷ்டி விரதம் இருக்க யாருக்கும் அனுமதி கிடையாது விடுதியில் தங்கியிருந்த கோயில் வளாகத்தில் அமர்ந்து சஷ்டி விரதம் இருக்க அனுமதி கிடையாது என தெரிவித்தார்.

மேலும் கோயில் வளாகத்தில் மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு  கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றார் யாரும் தடுப்பூசி போட கட்டாயப்படுத்த மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார் மேலும் குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் பேரூராட்சி மூலம் செய்து கொடுக்கப்படும் என்று தெரிவித்த ஆட்சியர் தனிநபர் சார்பாக அன்னதானம் வழங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என்றார். மேலும் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் பகுதியில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com