என்ன இப்படி மாறிட்டாங்க? தெலங்கானாவில் ஓட்டுக்குப் பணம் கேட்டு போராட்டம்

தங்களது வாக்குகளுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
என்ன இப்படி மாறிட்டாங்க? தெலங்கானாவில் ஓட்டுக்குப் பணம் கேட்டு போராட்டம்
என்ன இப்படி மாறிட்டாங்க? தெலங்கானாவில் ஓட்டுக்குப் பணம் கேட்டு போராட்டம்


தெலங்கானா மாநிலம் ஹுசூராபாத் சட்டப்பேரவைக்கு வரும் சனிக்கிழமை நடைபெறும் இடைக்காலத் தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்றால், தங்களது வாக்குகளுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

தங்களது விலைமதிப்பில்லாத வாக்குகளை செலுத்த வேண்டும் என்றால், அரசியல் கட்சிகள் தங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று நேரடியாக கோஷங்களை எழுப்பி, மக்கள் நடத்திய போராட்டத்தில், இதுவரை அரசியல் கட்சிகள் தங்களுக்கு அதிக வாக்குகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் உலகமறிந்த ரகசியம் இன்று வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் ஹுசூராபாத் சட்டப்பேரவை எம்எல்ஏவும் சுகாதாரத் துறை அமைச்சராகவும் இருந்த ராஜேந்தர், முதல்வருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தான் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதாவது, தங்களது அண்டை கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு அரசியல் கட்சிகள் கைநிறைய பணம் கொடுத்திருப்பதாகவும், இதுவரை தங்களுக்கு எதுவும் வரவில்லை என்று கூறி, கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் வீட்டு வாசலில் கூடியிருக்கும் மக்கள் கோஷம் எழுப்பினர். சிலர், நேரடியாகக் கட்சிப் பெயர்களைச் சொல்லியே அவர்களுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். 

அவர்களிடம் பேசிய போராட்டத்தைக் கைவிடச் செய்வது காவல்துறையினருக்கும் கடும் சவாலாக அமைந்துவிட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் விடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. ஒரு பெண்மணி, ஒவ்வொரு வாக்குக்கும் பணம் கொடுக்கிறார்கள். ஆனால் இதுவரை எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்கிறார். மற்றொரு பெண்மணியோ எங்கள் வீட்டில் 3 பேர் இருக்கிறோம். ஒரு ஓட்டுக்குத்தான் பணம் வந்துள்ளது என்று ஆவேசமாகக் கத்துகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com