கோயம்பேடு மேம்பாலத்தை நவ. 1ல் திறந்து வைக்கிறார் ஸ்டாலின்

சென்னையில் கோயம்பேடு பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 1ஆம் தேதி திறந்து வைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு மேம்பாலத்தை நவ. 1ல் திறந்து வைக்கிறார் ஸ்டாலின்
கோயம்பேடு மேம்பாலத்தை நவ. 1ல் திறந்து வைக்கிறார் ஸ்டாலின்

சென்னை: சென்னையில் கோயம்பேடு மற்றும் வேளச்சேரி பகுதிகளில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 1ஆம் தேதி திறந்து வைக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், விரைவில் மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வரும் நவம்பர் 1ஆம் தேதி கோயம்பேடு அருகே கட்டப்பட்டு வரும் மேம்பாலம் மற்றும் வேளச்சேரியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், கடுமையான போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் வகையில் கோயம்பேடு மற்றும் வேளச்சேரி பகுதிகளில் மேம்பாலங்கள் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், மேம்பாலக் கட்டுமானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, நவம்பர் 1ஆம் தேதி மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளது. இதனால், சென்னையின் முக்கியச் சாலைகளைக் கடக்கும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் நிம்மதி ஏற்படும் என்று கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com