கிருஷ்ணகிரியில் 12.5 சென்டிமீட்டர் மழை

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் புதன்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரியில் 12.5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரியை அடுத்த தந்தை குப்பம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீர்.
கிருஷ்ணகிரியை அடுத்த தந்தை குப்பம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழைநீர்.


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் புதன்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரியில் 12.5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட சில மாவட்டங்களில்  இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. 

இந்த நிலையில்  கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும்  புதன்கிழமை இரவு முதல் மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி உள்ளது. கிருஷ்ணகிரியில் 12.5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை ஆறு மணி வரையில் பெய்த மழை அளவு (மி.மீ): பாரூர் 22.2, தேன்கனிக்கோட்டை 20.4, ஒசூர் 10.5, கிருஷ்ணகிரி 125.25, அஞ்செட்டி 3, ஊத்தங்கரை 42.4, தளி10, பெனுகொண்டா புறம் 10.2, சூளகிரி 5, நெடுங்கல் 13, போச்சம்பள்ளி 16.6., கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 278.5  மில்லி மீட்டரும், சராசரியாக 23.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. 

இந்த மழையால் நிலக்கடலை போன்ற மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com