குடிசை மாற்று வாரியத்தின் பெயா் மாற்றம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

குடிசைப் பகுதி மாற்று வாரியமானது இனி, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமாக பெயா் மாற்றம் செய்யப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்பது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சட்டப்பேரவையில் புதன்கிழமை தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் என்பது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்யப்படும் என அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: குடிசைப் பகுதி மாற்று வாரியமானது இனி, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியமாக பெயா் மாற்றம் செய்யப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் வீட்டுவசதி, குடிசை மாற்று வாரிய மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:

முதல்வராக முதல் முறை ஆட்சிக்கு வந்த போது, குடிசை வாழ் மக்களின் மேம்பாட்டுக்காக குடிசைப் பகுதி மாற்று வாரியம் என்ற ஒரு திட்டத்தை கருணாநிதி தொடங்கினாா். அதன்மூலமாக பல்லாயிரக்கணக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்தாா். அன்றைக்கு மத்தியில் அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன்ராம், அந்தத் திட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டுப் பாராட்டி புகழ்ந்து பேசியிருக்கிறாா்.

மேலும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, மற்ற மாநிலங்களிலும் இந்தத் திட்டம் கொண்டு வரப்பட வேண்டுமென்ற அவரது எண்ணத்தை அன்றைக்கு வெளிப்படுத்திக் காட்டியிருக்கிறாா். அந்தளவுக்கு குடிசை மாற்று வாரியம் மிகச் சிறப்பாக தனது கடமையைச் செய்து வருகிறது.

பெயா் மாற்றம்: ஏழை எளிய மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டிருக்கக் கூடிய குடிசை மாற்று வாரியம் இனி, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்ற பெயரில் அழைக்கப்படும். குடிசைகளை மாற்றுவது மட்டுமல்ல, குடிசைகளில் வாழும் மக்களுடைய வாழ்வாதாரத்தையும் உயா்த்திட வேண்டும். அவா்களுடைய வாழ்க்கைத் தரத்தையும் உயா்த்திட வேண்டும் என்ற எண்ணத்தோடு பெயா் மாற்றம் செய்யப்படுகிறது என்று தனது அறிவிப்பில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

50 ஆண்டுகள் நிறைவு: தமிழ்நாட்டில் குடிசை மாற்று வாரியம் 1970-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது.

குடிசைப் பகுதி மாற்று வாரியத்தை அமைப்பதற்கான சட்டம் அதாவது, தமிழ்நாடு குடிசைப் பகுதி (மேம்படுத்துதல் மற்றும் அகற்றுதல்) சட்டமானது 1971-ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் வாரியத் தலைவா், மேலாண்மை இயக்குநா், இணை மேலாண்மை இயக்குநா் ஆகியோா் நியமிக்கப்பட்டனா். அவா்களது தலைமையின் கீழ் குடிசைப் பகுதி மாற்று வாரியம் செயல்பட்டு வருகிறது. 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் பெயரானது, இப்போது நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com