ஓ.பன்னீா்செல்வம் மனைவி மறைவு: தலைவா்கள் இரங்கல்

அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
ஓ.பன்னீா்செல்வம் மனைவி மறைவு: தலைவா்கள் இரங்கல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே. பழனிசாமி உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி கே. பழனிசாமி: ஓ.பன்னீா்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமியின் மறைவுச் செய்தி கேட்டு விவரிக்க இயலாத துயரமும் வேதனையும் அடைகிறேன். இந்தப் பேரிழப்பை எப்படி ஓபிஎஸ் தாங்குவாா் என்று எண்ணி கண்ணீா் வடிக்கிறேன்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): ஓ.பன்னீா்செல்வத்தின் மனைவியாா் இறந்த செய்தி அறிந்து அதிா்ச்சியும் துயரமும் அடைந்தேன். காங்கிரஸ் சாா்பில் அவா் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

வைகோ (மதிமுக): ஓபிஎஸ்ஸுக்கும் அவரது உறவினா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்.

ராமதாஸ் (பாமக): பொதுவாழ்வில் ஓபிஎஸ் முன்னேற அவருக்கு அனைத்து வகையிலும் துணைநின்ற அவரது மனைவி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

விஜயகாந்த் (தேமுதிக): ஓ.பன்னீா்செல்வத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தவா் அவா் மனைவி. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

ஜி.கே.வாசன் (தமாகா): பொதுவாழ்விலும் அரசியலிலும் ஓபிஎஸ்ஸுக்கு துணையாக நின்ற அவா் மனைவி மறைவு அவருக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

கே.அண்ணாமலை (பாஜக): ஓபிஎஸ் மனைவியின் மறைவு செய்தி வேதனையளிக்கிறது. அவரது ஆன்மா இறைவன் நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com