கூத்தாநல்லூர் : மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம்

குடிதாங்கிச்சேரி மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில், மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தொற்று தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூர் : மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம்


கூத்தாநல்லூர் வட்டம், குடிதாங்கிச்சேரி மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில், மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தொற்று தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையும், மனோலயம் தொண்டு நிறுவனம் மற்றும் லயன்ஸ் சங்கமும் இணைந்து குடிதாங்கிச்சேரி பள்ளி வளாகத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

கரோனா தடுப்பூசி முகாமிற்கு, மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியின் நிறுவனரும், மேட்டுப்பாளையம் லயன்ஸ் சங்கத் தலைவருமான ப.முருகையன் தலைமை வகித்தார்.

கூத்தாநல்லூர் வட்டாட்சியர் என்.கவிதா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள்  நல அலுவலர் ப.புவனா, சித்தாம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ரெத்தினவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியாளர் சுரேஷ் வரவேற்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாமை, திருவாரூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் ஹேமச்சந்திரஹாந்தி தொடங்கி வைத்தார். கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, மரக்கடை, பண்டுதக்குடி , சாத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு, இராயபுரம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் எஸ்.திரு ஒளி, கே.ஷாலினி மற்றும் செவிலியர்கள் வி.ஜெபஷாலினி, டி.கலாவதி, பொறுப்பாளர் கே.ருக்மணி உள்ளிட்டோர் கரோனா தடுப்பூசியை செலுத்தினர். 

முகாம் ஏற்பாடுகளை, பயிற்சியாளர்கள் பாபு ராஜன், அனுராதா, செளமியா உள்ளிட்டோர் கவனித்தனர். தொடர்ந்து, மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ஹேமச்சந்திரஹாந்தி, மாற்றுத்திறனாளிகள் தயாரித்த ஊதுபத்தி, பினாயில் உள்ளிட்ட பொருள்களைப் பார்வையிட்டு, விலை கொடுத்து வாங்கிச் சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com