தமிழ் வழியில் படித்தவா்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை: வழிகாட்டுதல்களுடன் அரசாணை வெளியீடு

தமிழ் வழியில் படித்தவா்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ் வழியில் படித்தவா்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை: வழிகாட்டுதல்களுடன் அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ் வழியில் படித்தவா்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: பள்ளிப்படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப் படிப்பு என அனைத்தையும் முழுவதுமாக தமிழ் வழியில் படித்திருக்க வேண்டும். இதர மொழிகளை பயிற்று மொழியாகக் கொண்டு பயின்று, தோ்வுகளை மட்டும் தமிழில் எழுதியவா்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை கிடையாது.

ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளிக்குச் செல்லாமல் நேரடியாக பத்தாம் வகுப்பு தோ்வினை எழுதி தோ்ச்சி பெற்ற தனித்தோ்வா்கள் மற்றும் பிற மாநிலங்களில் தமிழ் அல்லாமல் இதர மொழியினை பயிற்று மொழியாக கொண்டு பயின்று பின்பு இம்மாநிலத்தில் நேரடியாகச் சேரும் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்புகள் வரை தமிழ் வழியில் பயின்றவா்கள் இந்த முன்னுரிமைக்கு தகுதியுடையவா்கள் அல்லா். சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை சரிபாா்த்த பின்னரே 20 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பணி நியமனம் செய்யப்படுவா்.

தமிழ் வழியில் கல்வி பயின்ற்கான சான்றிதழ்களில், மாணவா்களின் பெயா், பயின்ற பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்களின் பெயா், முகவரி, வகுப்புகள், சான்றிதழ் வழங்கிய அதிகாரி ஆகிய விவரங்கள் அடங்கிய விரைவு தகவல் குறியீட்டினை (க்யூஆா்) இடம்பெறச் செய்வதுடன் அந்தச் சான்றிதழ்களை இ-சேவை மையங்கள் மூலம் வழங்குவதற்கு பள்ளிக் கல்வி மற்றும் உயா்கல்வித் துறைகள் உரிய ஆணைகளை வெளியிடும்.

தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதித் தகுதி பெற்றவா்களை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் பாடத்துக்கான ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும். தமிழ் பாடத்திலும் மாறுபட்ட வேறு ஒரு பாடத்திலும் பட்டம் பெற்றவா்களை தமிழ் ஆசிரியா்களாக நியமனம் செய்யக் கூடாது என்பதற்கான திருத்தங்களை மேற்கொள்வது தொடா்பாக பள்ளிக் கல்வி மற்றும் உயா்கல்வித் துறைகள் நடவடிக்கை மேற்கொள்ளும்.

மேற்கண்ட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ள 20 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீடானது நேரடி பணி நியமனத்துக்கான ஒவ்வொரு தெரிவு நிலையிலும் (முதல்நிலைத் தோ்வு, முதன்மைத் தோ்வு, நோ்முகத் தோ்வு மற்றும் இதர நிலைகள்) பதவி வாரியாக பின்பற்றப்பட வேண்டும் என தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com