வேதாரண்யம் பகுதியில் கொட்டித் தீர்த்த  மழை!

நாகை மாவட்டம்,வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது. வேதாரண்யத்தில் 12.5 மி.மீ. மழை பெய்துள்ளது.
வயல்களில் தேங்கியுள்ள மழை நீர்
வயல்களில் தேங்கியுள்ள மழை நீர்

வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது. வேதாரண்யத்தில் 12.5 மி.மீ. மழை பெய்துள்ளது.

பஞ்சநதிக்குளம் ஊராட்சியில் நெல் விதைப்புக்கு ஆயத்தமான வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் .

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக, பல மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் (செப்.3) இடி, மின்னலுடன் பரவலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. 


ஞாயிறுசந்தை-பழனியப்பா சாலைக்கு செல்வதற்கு பாதையாக பயன்படும் வாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் இருச்சக்கர வாகணத்தில் பயணிக்கும் பெண்.

வேதாரண்யம்  நகரப் பகுதியை விட கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், குரவப்புலம் சுற்றுப் பகுதியில் கனமழையாக இருந்தது. வயல்களில் மழை நீர் பெருக்கெடுத்தது.

வேதாரண்யத்தில் 31. 2 மி.மீட்டரும், தலைஞாயிறில் 11 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com