கோயில்களில் மொட்டையடிக்க இனி கட்டணமில்லை: சேகர்பாபு

தமிழகத்தில் உள்ள கோயில்களில் மொட்டையடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என பேரவையில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
கோயில்களில் மொட்டையடிக்க இனி கட்டணமில்லை: சேகர்பாபு
கோயில்களில் மொட்டையடிக்க இனி கட்டணமில்லை: சேகர்பாபு


சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் மொட்டையடிக்க இனி கட்டணம் வசூலிக்கப்படாது என பேரவையில் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

2021 - 2022 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கைகள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில், தமிழகத்தில் உள்ள அறநிலையத் துறையின் கீழ் இருக்கும் எந்தக் கோயிலிலும் இனி, மொட்டை அடிக்க பக்தர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்தார்.

மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால், கோயில்களில்  திருமணம் நடத்த கட்டணமில்லை.

தமிழகத்தில் சென்னை உள்பட 8 இடங்களில் கலை, அறிவியல் கல்லூரிகள் ரூ.150 கோடி செலவில் கட்டப்படும்.

அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகை ரூ.1000 வழங்கப்படும், இதற்காக ஆண்டுக்கு ரூ.13 கோடி ஒதுக்கப்படும்.

திருக்கோயில்களை பாதுகாப்பதற்கென ரூ.10 ஆயிரம் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com